மேல் மாகாணத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்பதையிட்டு, இன்று தீர்மானிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள். தற்போதைய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராய்ந்த பின்னரே இது குறித்து முடிவெடுக்கப்படும்.
தொற்று நோயியற் பிரவு அதிகாரிகள், சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆகியோருடன் ஆராய்ந்த பின்னரே ஊரடங்கை நீடிப்பதா என்பது குறித்து அறிவிக்கப்படும் என காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வியாழக்கிழமை நள்ளிரவு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஊரடங்கு தொடர்பில் இன்று ஆராயப்பட்ட பின்னர் மாலையில் இதனை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.