மேல் மாகாணத்தில் மட்டும் இதுவரை 235 பொலிஸாருக்கு கொரோனா தொற்று

0
167

மேல் மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் இதுவரை 235 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அவர்களில் 6 பேர் குணமடைந்த நிலையில் மருத்துவமனைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன்படி தற்போது சிகிச்சை பெறும் பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 229 ஆகும்.

இதுதவிர தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு குறைந்தது 300 பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் சுய தனிமைப்படுத்தலில் 1,425 பொலிஸார் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.