யாழில் தன் கழுத்தை தானே அறுத்த பெண்ணால் பரபரப்பு

0
47

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாயில் தனது கழுத்தை தானே அறுத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் – தொட்டிலடி பகுதியில் இன்றையதினம் இளம் குடும்பப் பெண்ணொருவர் தனது கழுத்தை தானே கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளார்.

இதனால் குறித்த பெண்ணின் கழுத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் சங்கானை பிரதேச மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அராலி பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரே இவ்வாறு தனது கழுத்தை தானே காயப்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார் எனவும் அறியமுடிகிறது. மானிப்பாய் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.