யாழில் பெற்றோலுக்கு வரிசையில் காத்திருந்தவர் மரணம்!

0
119

யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.

நேற்று திங்கட்கிழமை மாலை சாவகச்சேரி – நுணாவில் லங்கா ஐ. ஓ. சி. எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் வாசலை அண்மித்தபோது திடீரென மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.