நாட்டு மக்களுக்காக, அரசியல்வாதிகள் எதையும் செய்யப் போவதில்லை எனவும், மக்கள் போராட்ட முன்னணி என்பது, மக்களுக்கான அமைப்பு எனவும், ஜனாதிபதி வேட்பாளர் நுவான் போபாகே தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டு மக்களுக்காக, இந்த அரசியல்வாதிகள் எதையும் செய்யப் போவதில்லை.
இன்றையதினம், ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
எப்படி தமிழ் மக்களை ஏமாற்றி, தமது வாக்குகளை வாங்க முடியும் என்பது, அவர்களின் இலக்கு.21 ஆம் திகதிக்கு பின்னர், அவர்களின் மனநிலை மாறிவிடும்.
21 ஆம் திகதி மட்டுமே, இவர்கள் மக்கள் பிரச்சினை பற்றி பேசிக்கொள்வார்கள்.
மக்கள் போராட்ட முன்னணி என்பது, மக்களுக்கான ஒரு அமைப்பு.
பதின்மூன்றாவது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் பற்றி இவர்கள் பேசுவதில்லை.
தேர்தல் வரும் பொழுது மட்டுமே, இவர்கள் இந்த 13 ஆவது அரசியல் சீர்திருத்தத்தை பற்றி பேசுகின்றார்கள்.வட பகுதி மீனவர்களின் பிரச்சினை பற்றி பேசுகிறார்கள்.
21 ஆம் திகதி காலையில் எழுந்து, நீங்கள் குடைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.மக்களுடைய பிரச்சினைக்கு எங்களிடம் தீர்வுகள் உள்ளன.
என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், புதிய மார்க்சிய ஜனநாயக லெனின் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்தில்வேல்,மக்கள் போராட்ட முன்னணியின் சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் மற்றும் புதிய ஜனநாயக மார்க்ஸி லெலினிச கட்சியின் நிறைவேற்று குழு உறுப்பினர் எஸ்.பிரதீபன் ஆகியோர் பங்கேற்றனர்.