யாழ் நகர் அப்பிள் வியாபாரிகள் யாழ் மாநகர சபை முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
நீதிமன்ற கட்டளையின்படி தமக்கு கடைகள் வழங்கப்பட்டதாகவும் தற்போதைய முதல்வர் உள்நோக்கத்தோடு தமது கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் யாழ் மாநகர சபை முன்றலில் தமது எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.
தற்போதைய நாட்டிலுள்ள கொரோனா தொற்று அச்சநிலைமையில் ஒன்று கூடுதல் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசாரின் பாதுகாப்புடன் குறித்த போராட்டம் இடம்பெறுகின்றது.
இன்றைய தினம் யாழ்மாநகர சபையின் மாதாந்த அமர்வு இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது