யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டட தொகுதியில் உள்ள கடைகள் மூடப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன .
நேற்று தொற்று இனங்காணப்பட்ட நபரின் உறவினர்களின் கடைகள் 4 யாழ்ப்பாண நகரில் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதோடு குறித்த நான்கு கடைகளுடனும் ஏனைய அழகு சாதன பொருட்கள் விற்கும் கடையினர் தொடர்புகளைப் பேணியதன் காரணமாக இன்றைய தினம் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதி முடக்கப்படலாம். யாழ்ப்பாண மாநகர முதல்வர், யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி, போலீசார் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடிவருகின்றனர்.