Home உள்நாட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இருவருக்கு தொற்று

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இருவருக்கு தொற்று

0
யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இருவருக்கு தொற்று

யாழ் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து, சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்ட ஒருவருக்கும் கோப்பாய் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து மாற்றப்பட்ட பெண் ஒருவருக்குமே இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருவரிடமும் நேற்றைய தினம் பெறப்பட்ட மாதிரியின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று மாலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொட மீன் சந்தை கோரோனா தொற்று பரவல் கொத்தணியுடன் தொடர்புடைய தென்னிலங்கையைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here