யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் விடுமுறையில் சென்று வருவோர் தனிமைப்படுத்த படுவதில்லை என குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் கொழும்பு, கம்பகா மேல் மாகாணத்தை சொந்த இடமாகக் கொண்ட தாதியர்கள் வைத்தியர்கள் விடுமுறைக்காக தமது சொந்த இடங்களுக்கு சென்று வருகின்ற போதிலும் அவர்களை தனிமைப்படுத்துவது இல்லை என குற்றஞ்சாட்டப்படுகின்றது
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட இடங்களுக்கும் தமது தொழில் நிமித்தம் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு அடையாள அட்டையை பயன்படுத்தி சுதந்திரமாக தமது இடங்களுக்கு விடுமுறையில் சென்று வருகிறார்கள் எனினும் அவர்கள் மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்த பின்னர் அவர்கள் தனிமைப்படுத்தலோ அல்லது PCr பரிசோதனைக்கோஉட்படுத்தப் படுவதில்லை இது யாழ்ப மாவட்டத்தில் ஒரு அபாய நிலையை ஏற்படுத்த ஏதுவாக அமையும் என குற்றஞ்சாட்டப்படுகின்றது
எனினும் இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது இது குறித்து நாளைய தினம் விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்திருப்பதாகவும் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு சென்று வருவோர் கட்டாயமாக தமது பதிவினைமேற் கொண்ட பின்னரே சென்றுவர வேண்டும் அவ்வாறு அபாய இடங்களுக்குசென்று வருவோர் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டு PCr பரிசோதனையின் பின்னரே தொடர்ச்சியாக கடமையாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.