31 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழ். மருத்துவ பீடத்தில் மீண்டும் மருத்துவ பீடத்தில் மீண்டும் PCR பரிசோதனை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. 
வடக்கில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை  அதிகரித்துவரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்திரம்  பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில்  தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலும் பி. சி. ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று யாழ் . பல்கலைக் கழகத்தில் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று வெள்ளிக் கிழமை காலை இடம்பெற்றது. 
இந்தக் கூட்டத்தில் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்  எஸ். கேதீஸ்வரன், உதவிப் பணிப்பாளர் மருத்துவர் எஸ். குமாரவேல், யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி, யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடாதிபதி மருத்துவ நிபுணர் எஸ். ரவிராஜ், சமுதாய மருத்துத் துறைத் தலைவரும், பல்கலைக் கழக கோவிட் 19 செயலணி இணைப்பாளருமான மருத்துவர் எஸ். சுரேந்திரகுமாரன் மற்றும் நுண்ணுயிரியல், நோயியல் துறை விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர். 
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மீண்டும் பி. சி. ஆர் பரிசோதனைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிப்பதற்கு அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பி. சி. ஆர் பரிசோதனைகளுக்குத் தேவையான மாதிரிகளை மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாகப் பெற்றுக் கொள்வது எனவும், ஆய்வ நடவடிக்களுக்கான நுண்ணுயிரியல் சிறப்பு ஆலோசனைகளை வழங்குவதற்கும், தேவையான உயரியல் காப்பு முறைகளைக் கண்காணித்து, அறிவுறுத்தல் வழங்குவதற்கு யாழ். போதனா வைத்தியசாலையின் ஒட்டுண்ணியியல் நிபுணர் வைத்திய கலாநிதி திருமதி ரஜந்தி இராமச்சந்திரன் செயற்படுவார் என்றும், உயிரியல் மற்றும் ஆய்வு கூடக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றும் பணியை யாழ். போதனா வைத்தியசாலை மேற்கொள்ளும் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 

மருத்துவ பீடத்தின் வழக்கமான பணிகளுக்குப் பாதிப்பேதும் ஏற்படாத வகையில் சர்வதேச நுண்ணுயிரியல் ஆய்வுத் தர நியமங்களுக்கமைய பி. சி. ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட விருக்கின்றன. மருத்துவ பீடத்தில் இருந்து கடந்த முறை இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்களான அ. முருகானந்தன், மு. கலாமதி மற்றும் பேராசிரியர் செ. கண்ணதாசன் ஆகியோர் மட்டுமே இந்தப் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர். இவர்களுடன் பணியாற்றுவதற்கென நுண்ணுயிரியல் ஆய்வு கூடவியலாளர்களைப் பணிக்கமர்த்துவதற்கு யாழ். பல்கலைக்கழகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் தற்போதுள்ள பி. சி. ஆர் பரிசோதனை இயந்திரத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 60 மாதிரிகளே சோதனை செய்யப்பட முடியும். இதனை 180 ஆக அதிகரிப்பதற்காக, ரூபா 50 லட்சம் பெறுமதியான புதிய பி. சி. ஆர் பரிசோதனை இயந்திரம் ஒன்றை வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா இந்தக் கூட்டத்தில் உறுதியளித்துள்ளார். 

மருத்துவ பீடத்தினால் மேற்கொள்ளப்படும் பி. சி. ஆர் பரிசோதனை முடிவுகள் தினமும் மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்படும். 

Related Articles

இப்படியும் நடக்கிறது…!

நீச்சல் குளத்தில் தண்ணீர் அடிக்கடி கெட்டுவிடுவதை அறிந்தார் ஹோட்டல் முதலாளி.காவல்காரனை அழைத்து ஒரு வாரத்துக்கு யாரையும் நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்காதே, என்றார்.அன்று மாலையே இளம் பெண் ஒருத்தி குளிப்பதற்காக...

சவேந்திர சில்வாவை வெளியேற்றும் தீவிர முயற்சியில் மஹிந்த கும்பல்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ தலைமையினலான ஸ்ரீலங்கா...

ரூ . 100,000 சம்பளம் வாங்குபவர்கள் கூட போதுமான உணவை உண்ண முடியாத நிலை !

இந்த நாட்டில் 32 இலட்சம் குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி அதிகாரி பிரசன்ன விஜேசிறி...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

இப்படியும் நடக்கிறது…!

நீச்சல் குளத்தில் தண்ணீர் அடிக்கடி கெட்டுவிடுவதை அறிந்தார் ஹோட்டல் முதலாளி.காவல்காரனை அழைத்து ஒரு வாரத்துக்கு யாரையும் நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்காதே, என்றார்.அன்று மாலையே இளம் பெண் ஒருத்தி குளிப்பதற்காக...

சவேந்திர சில்வாவை வெளியேற்றும் தீவிர முயற்சியில் மஹிந்த கும்பல்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ தலைமையினலான ஸ்ரீலங்கா...

ரூ . 100,000 சம்பளம் வாங்குபவர்கள் கூட போதுமான உணவை உண்ண முடியாத நிலை !

இந்த நாட்டில் 32 இலட்சம் குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி அதிகாரி பிரசன்ன விஜேசிறி...

கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு பணம் தேவை!

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு பணம் தேவைப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையின் பட்டயக் கணக்காளர்களால் நடத்தப்பட்ட தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில்...

இந்திய வீசா மோசடி: வத்தேகம பிரதேசத்தில் இளைஞர் கைது

இந்திய விசா விண்ணப்ப மையத்தின் கண்டி கிளையின் போலி இணையத்தளத்தை பராமரித்து மக்களை மோசடி செய்த இளைஞர் ஒருவர் கண்டி வத்தேகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த...