யுக்ரைனுடனான போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி இணக்கம்!

0
4

யுக்ரைனுடனான போர் நிறுத்தத்திற்கு உடன்படுவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் அமெரிக்காவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வந்த போரை தற்போது தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ரஷ்யா மீது மேலும் தடைகள் விதிக்க தீர்மானித்துள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ரஷ்யாவின் எண்ணெய் எரிவாயு மற்றும் வங்கி துறைகள் மீது அமெரிக்கா மேலும் தடைகளை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.