யுனெஸ்கோ அமைப்பின் தலைவர் இலங்கை வருகை!

0
109

ஐக்கிய நாடுகள் கல்வியியல், விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோ தலைவர் ஒட்ரே அசோலே உத்தியோகபூர்வ பயணமாக எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அவர் எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார்.

இந்தக் காலப்பகுதியில், யுனெஸ்கோவில் இலங்கை இணைந்த 75 ஆண்டுகள் நிறைவு விழாவிலும் பங்கேற்பார்.

அத்துடன், யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுரிமையாக பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையிலுள்ள இடங்களையும் அவர் பார்வையிடுவார்.

இதன்போது அவர், ஜனாதிபதி உள்ளிட்ட அரச உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.