ரஸ்ய ஜனாதிபதி புட்டினின் கார் வெடித்து சிதறியது

0
66
Russia's President Vladimir Putin attends a meeting with Chairman of the Constitutional Court Valery Zorkin in Saint Petersburg, Russia September 12, 2024. Sputnik/Alexander Kazakov/Pool via REUTERS

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புட்டினின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு வாகனங்களில் ஒன்றான கார்  திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. 

ரஸ்யாவைச் சேர்ந்த ஆரஸ் நிறுவனம் தயாரித்த இந்த ஆரஸ் லிமோசின் கார் மொஸ்கோ வீதியில் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கார் ரஸ்ய உளவுத்துறையான (FSB)எப்.எஸ்.பி. தலைமையகத்திற்கு அருகே நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், திடீரென அந்த கார் வெடித்துத் தீப்பிடித்தது. முதலில் கார் எஞ்சனில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பிறகு அது மெல்ல உட்புறம் வரை பரவியதாகத் கூறப்படுகிறது.

இந்த கார் ரஸ்ய ஜனாதிபதி மாளிகையின்  ஜனாதிபதி சொத்து முகாமைத்துவ துறைக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது. இருப்பினும், திடீரென பாதுகாப்பு  கார் வெடித்துச் சிதற என்ன காரணம் கார் வெடித்துச் சிதறிய போது உள்ளே யாராவது இருந்தார்களா என்பது போன்ற தகவல்கள் தெளிவாகத் தெரியவில்லை. அதேநேரம் இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கார் வெடித்த சம்பவம் ரஸ்ய ஜனாதிபதி புட்டினை கொல்ல சதியாக இருக்கலாமோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. அதேநேரம் இது சம்பவம் தொடர்பாக ரஸ்ய அரசு இதுவரை எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. ரஸ்ய ஜனாதிபதி புட்டினை கொலை செய்யச் சதித்திட்டங்கள் நடந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சம்பவம் ரஸ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.