28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்வது ஏற்புடையதல்ல

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை அரசியல் காரணங்களுக்காக விடுதலை செய்ய கோருவது ஏற்புடையதல்ல என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஏழு பேரை விடுவித்தால் சிறைச்சாலைகளில் 25ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுவற்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் கொலை, குற்றம் செய்தவர்களை குற்றவாளிகளாகத்தான் கருத வேண்டுமே தவிர, அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல

கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்தால், தமிழகத்தில் பொலிஸ் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்று அர்த்தம்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles