33 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ரூ . 100,000 சம்பளம் வாங்குபவர்கள் கூட போதுமான உணவை உண்ண முடியாத நிலை !

இந்த நாட்டில் 32 இலட்சம் குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி அதிகாரி பிரசன்ன விஜேசிறி தெரிவித்துள்ளார்.ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் “ விவசாயமும் உணவுப் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற ஆராய்ச்சி உரையாடலில் அவர் இதனைத் தெரிவித்தார்.“இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு பொருளாதார பாதுகாப்பு” என்ற ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்த சிரேஷ்ட ஆய்வு அதிகாரி பிரசன்ன விஜேசிறி, மாதமொன்றுக்கு எண்பதாயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டும் மற்றும் சிறுதொழில் மூலம் வருமானம் ஈட்டும் மக்களின் உணவுப் பாவனையும் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். .இந்த நாட்டில் உள்ள குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பின்மை 54 சதவீதமாக இருப்பதாகவும், நாட்டின் நகர்ப்புற, கிராமப்புற மற்றும் தோட்டத் துறையில் உணவுப் பாதுகாப்பின்மை முறையே 43, 53 மற்றும் 67 சதவீதமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.கடந்த 2021ம் ஆண்டை விட, 2022இல், சிக்கன், மீன், முட்டை உள்ளிட்ட புரத உணவுகளை உட்கொள்வதை 50 சதவீதம் குறைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்த நிலை இந்த ஆண்டிலும் தொடர்கிறது என மூத்த ஆராய்ச்சி அதிகாரி மேலும் கூறினார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles