சவூதி அரேபியா கால்பந்து கிளப் அணியான அல் நாசர் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ 850 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
அல் நாசர் – அல் ஹசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ரொனால்டோவில் அல் நாசர் அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 68வது நிமிடத்தில் கோல் அடித்ததன் மூலம் ரொனால்டோ இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அத்துடன் இந்த சீசனில் இரண்டு தொடர் தோல்விகளை பெற்ற அல் நாசர் அணி, சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெற்றி பெற்றதுடன் புள்ளிப்பட்டியலிலும் முன்னேறியது.இந்த சீசனில் இதுவரை ரொனால்டோ 6 கோல்கள் அடித்துள்ளார்.