யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தினரால் 100 மூக்குகண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டது
யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகமும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையும் இணைந்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இலவச கண் மருத்துவ முகாம் நடாத்தினர்
குறித்த கண் மருத்துவ முகாமில் மூக்குக்கண்ணாடி தேவையுடைய 100 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் லயன்ஸ் கழகத்தினரால் வழங்கிவைக்கப்பட்டது
மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சர் விமலசேன, கண் வைத்திய நிபுணர் வைத்தியர் திலீபன், வைத்தியர் பிரதீபன் மாவட்ட லயன்ஸ் கழக ஆளுநரின் பிரதி பொருளாளர் எஸ் பாலகுமார் சிற்றிலயன்ஸ் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.