லுணுகம்வெஹெர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

0
149

ஹம்பாந்தோட்டை மாவட்டம் லுணுகம்வெஹெர பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

37 வயதுடைய நபர் உயிரிழந்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.