25 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வங்கதேசத்தில் கடும் வெள்ளப் பெருக்கு: 25 பேர் பலி

பருவமழை வெள்ளத்தால் வங்கதேசத்தில் இதுவரை குறைந்தது 25 பேர் உயிழந்து உள்ளதாகவும், மேலும் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வங்கதேசத்தில் பருவமழையினால் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக மாறி வருகிறது. பருவமழையினால் வெள்ளம் ஏற்படுவது இயல்புதான் என்ற போதிலும் பருவநிலை மாற்றம் வெள்ளம் ஏற்படும் கால அளவை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பருவநிலை மாற்றம் வெள்ளத்தின் தீவிரத்தையும் அதிகப்படுத்துவது கூடுதல் சோதனை எனவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால் வங்கதேசத்தின் வடகிழக்குப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணியில் மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர் கனமழையினால் ஆற்றின் கரை உடைபட்டு பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தில் தங்களது வீடுகளை இழந்தவர்களை பள்ளிக் கூடங்களில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான மழையின் போது மின்னல் தாக்கியதில் 2 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.மேலும், வெள்ளத்தினால் ஏற்பட்ட மலைச்சரிவினால் 4 பேர் உயிரிழந்தனர்.
தொடர் வெள்ளப் பெருக்கால் வங்கதேச மக்களின் நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. வெள்ளத்தினால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையமான சில்ஹட் விமான நிலையம் வெள்ள பாதிப்பினால் தனது விமான சேவைகளை நிறுத்தியுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு நாட்டில் வெள்ளப்பெருக்கு தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles