வடக்கில் 200 சுகாதார ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல்

0
165

வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறையில் சேவையாற்றி ஓய்வுபெற்ற 200 ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் 15 வருடங்களாக தன்னார்வ தொண்டர்களாக பணியாற்றியுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் சேவையாற்றிய இவர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வுபெற்றிருந்தனர்.

இந்நிலையில், இவர்கள் ஓய்வுபெற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்தும் ஓய்வூதியம் கிடைக்கப்பெறவில்லை.

இவர்களில் சில ஊழியர்களுக்கு 45 வயதின் பின்னரே நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஓய்வூதியம் வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் தேவை என கடந்த வருடம் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

எனினும், வடக்கு மாகாண சுகாதார அதிகாரிகளுடனான சந்திப்பின்போது இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

இதனிடையே, சேவை நிரந்தரம் செய்யப்படும் முன்னர் 15 வருடங்கள் தன்னார்வ பணியாளர்களாக நாம் செயல்பட்டோம்.

45 வயதை எட்டிய பின்னர் நிரந்தர நியமனம் வழங்கியமை எமது தவறல்ல, அதிகாரிகளின் தவறே என சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

நிரந்தர நியமனம் மற்றும் ஓய்வூதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

சேவைக்காலத்தில் சம்பளத்தில் இருந்து சகல கழிப்பனவுகளும் மேற்கொள்ளப்பட்டன.

எனவே, ஓய்வூதியம் வழங்கவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்காதது தமக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.