வடக்கில் 4 வீதிகளின் புனரமைப்பு பணிகள் நாளை ஆரம்பிக்கின்றன; யாழில் மூன்று வீதிகள்.
நாட்டில் ஒரு லட்சம் கிலோ மீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட நான்கு வீதிகளை சீரமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை ஆரம்பித்து வைக்கிறார்.
இதில், யாழ்ப்பாணத்தில் மூன்று வீதிகளின் சீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
1.60 கிலோ மீற்றர் தூரமுடைய யாழ்ப்பாணம் – கடற்கரை வீதி 488.4 மில்லியன் ரூபாய் செலவில் சீரமைக்கப்படவுள்ளது.
5.503 கிலோ மீற்றர் நீளமுடைய வல்லை- உடுப்பிட்டி – வல்வெட்டித்துறை வீதி 507.50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.
இந்த இரண்டு வீதிகளுக்குமான முன்மொழிவை யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்திருந்தார்.
1.23 கிலோ மீற்றர் நீளமுடைய அரியாலை நெடுங்குளம் பிள்ளையார் கோவில் வீதி 54.443 மில்லியன் ரூபாய் செலவிலும் இதனை கடற்தொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவினால் முன்மொழியப்பட்டது.
2.05 கிலோ மீற்றர் நீளமுடைய கிளிநொச்சி செல்வபுரம் – கிருஸ்ணபுரம் வீதி 74.40 மில்லியன் ரூபாய் செலவிலும் சீரமைக்கப்படவுள்ளன.