29 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வடக்கு மாகாண கைத்தொழில் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வு இன்று!

இன்டஸ்ரி யப்னா எடியுகேசன் -2023 என பெயரிடப்பட்ட கைத்தொழில் உற்பத்தி கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

குறித்த கண்காட்சி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய கலாசார மத்திய நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அதிகாரசபையும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில், பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் திஸாநாயக்க கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் கலந்துகொண்டார்.

நிகழ்வில் திணைக்களம் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள், கைத்தொழில் அதிகார சபை அதிகாரிகள், ஊழியர்கள், உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கைத்தொழில் உற்பத்தி கண்காட்சிக்கூடத்தை பார்வையிட்டனர்.

நேற்று முன்தினம் ஆரம்பமான குறித்த கண்காட்சி இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

இக் கண்காட்சி கூடத்தில் நாடளாவிய ரீதியிலிருந்து வருகை தந்த கைத்தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தியதுடன்,
சந்தைப்படுத்தலிலும் ஈடுபட்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles