வட்டவளை, தியகல பகுதியில், இன்று மாலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழப்பு

0
135

நுவரெலியா வட்டவளை, தியகல பகுதியில், லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக, வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீரபிட்டிய, மொரகஹாபள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த, 30 வயதுடைய பிரதிப் குமார அஸ்விஸ் என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டி பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்று கொண்டிருந்த ‘கள்’ லொறியும், ஹட்டனில் இருந்து கினிகத்தேனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் விபத்திற்குள்ளானது.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை, தியகல பகுதியில், இன்று பிற்பகல் 3.30 மணியளவில், மழையுடனான காலநிலை நிலவிய போது, விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனால், மோட்டார் சைக்களில் சென்ற நபர் வழுக்கிச்சென்று, லொறியின் பின்பகுதி சிக்கில் சிக்குண்டார் என தெரியவந்துள்ளது.