வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவத தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மைய நாட்களில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களைத் தாங்களே வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி அவர்களின் உடல்நிலையில் மாறுபட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனைகளுக்கு தங்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் சமூகப் பொறுப்புடன் ஒவ்வொரு குடிமகனும் நடந்து கொள்வது மட்டுமன்றி மக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் மற்றும் பொது சுகாதரப் பணியாளர்கள் சிறப்புக் கவனம் கொண்டிருப்பதும் அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அத்தியாவசியப் பொருட்களுக்கு திட்டமிட்டு தட்டுப்பாடுகளை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் அறிவித்துள்ளார்.