கம்பஹா மாவட்டம் ராகமை எலபிட்டிவல பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.