வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் வல்லையில் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு பனை வனமாக்கல் திட்டம் ஆரம்பமானது.
வல்லையில் மயானத்துக்கு அருகில் வெற்றிடமாகவுள்ள அரச காணியில் நூற்றுக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ் தலைமையில் பனம் விதைகள் நடும் பணிகள் இடம்பெற்றன.