வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர்- ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவிப்பு!

0
69

கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர், தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பால் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தாம் ஆதரவு வழங்குவதாகவும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த அனைவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத் தலைவி அமலநாயகி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.