வலி.வடக்கு பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட கட்டுவன் வீதியில் உள்ள கட்டுப்பிட்டி இந்து மயானத்தினை சம்பந்தப்பட்ட தரப்பினர் புனரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சித்தியம்புளியடி, கோயிற்புலம், பெரியபுலம், வண்ணமாதரை, கிளானை, சாத்தனாவத்தை, மகாதனை, சிங்காவத்தை, களவட்டாவத்தை, துர்க்காபுரம், தொந்தனை,கோட்டைக்காடு,மற்றும் மல்லாகத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் உறவுகளின் தகனக்கிரியைகளை மேற்கொள்வது இந்ந இந்து மயானத்தில் ஆகும். அண்ணளவாக 10 பரப்பு கொள்ளளவைக் கொண்ட மேற்படி இந்து மயானத்தில் பற்றைக் காடுகளும், பாதீனியச் செடிகளும் சூழ்ந்து காணப்படும் அதே வேளை, மாயான மண்டபத்தின் ஒரு பகுதி கூரை உடைந்த நிலையில் காணப்படுகிறது.
அத்தோடு இந்த மயானத்துக்கு உரிய கிணறு பாவிக்க முடியாத நிலையில் உள்ளது அத்தோடு மயானத்தில் ஒரு வைரவர் ஆலயம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு மின்சார வசதி இல்லாத நிலையும் சுட்டிக்காட்டத் தக்கது இறந்த உடலை தகனம் செய்வதற்கான கட்டணத்தை வலி.வடக்கு பிரதேச சபை அறவிடுகின்றது. எனவே வலி.வடக்கு பிரதேச சபை, இப் பகுதியை சேர்ந்த பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மேற்படி மயானத்தின் புனிதத் தன்மையை பேணும் வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஅப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.