ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக் கூட்டத்தில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.