வவுனியாவில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்து – இருவர் காயம்

0
117

வவுனியா – பறனட்டகல் பகுதியில் பாரவூர்தி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை முறுகண்டியில் இருந்து வவுனியா நோக்கி வந்த பாரவூர்தி, பறன்நட்டகல் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்தே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.