வாகை முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

0
8

பெரிய வாகை மரம் முறிந்து வீழ்ந்தால் மஸ்கெலியா- ஹட்டன் போக்குவரத்து தடை பட்டுள்ளது.ஞாயிற்றுக்கிழமை (06) காலை 6.30 இடம் பெற்றுள்ளது.

இன்று அதிகாலை வேளையில் கன மழையுடன் கூடிய காற்று காரணமாக இந்த பாரிய வாகை மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.

நோர்வூட் நிவ் வெளி பகுதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அண்மித்த பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மரத்தை அகற்றும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.