வாவியொன்றில் நீராடச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0
137

ஹம்பாந்தோட்டை ரிதிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓகொடபொல, மஹயாய பிரதேசத்தில், வாவியொன்றில் நீராடச் சென்ற மாணவர் ஒருவர், நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார் என்று ரிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பொல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மாணவரே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

விளையாட்டுப் போட்டியொன்றில் கலந்துகொள்வதற்காக கோக்கரெல்ல பிரதேசத்திலுள்ள பாடசாலைக்கு வந்த மாணவர்கள் குழுவொன்று, விளையாட்டுப் போட்டி முடிந்து வீடு திரும்பும்போது குறித்த வாவியில் நீராடியுள்ளனர்.

இதன்போதே குறித்த மாணவர் நீரில் மூழ்கியுள்ளார்.

பிரதேச மக்களின் உதவியுடன் மாணவர்; மீட்கப்பட்டு கோணியாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக கோணியாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.