ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக, விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக நீண்ட தூரப் பயணச் சேவைகளுக்காக மேலதிகமாக இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.