நடிகர் விஜய்யின் 65 ஆவது படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து இயக்குனர் முருகதாஸ் விலகியதற்கு முக்கியக் காரணம் அவரின் சம்பளத்தில் கைவைத்ததுதானாம்.
மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக முருகதாஸ் சொன்ன கதையில் விஜய்க்கு திருப்தி இல்லாததே காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் வேறாம்.
தமிழ் சினிமாவில் ஷங்கருக்கு இணையாக சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் ஒருவர் முருகதாஸ். அவர் இயக்கிய தர்பார் படத்துக்கு அவருடைய சம்பளம் 30 கோடி என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த படம் பிளாப் ஆனதால் விஜய் படத்துக்கு 25 கோடி ரூபாய் சம்பளம் என ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் கொரோனா பாதிப்பை அடுத்து மேலும் சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள சொல்லியுள்ளது தயாரிப்பு நிறுவனம். அதற்கு முருகதாஸ் ஒத்துக்கொள்ளாததால் தான் படத்தில் இருந்து விலகினாராம்.