28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி -49!

வெளிநாட்டு செயற்கைகோள்கள் உட்பட 10 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி -49 நேற்;று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது ஸ்ரீPஹரிகோட்டா தளத்தில் இருந்து பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் மூலம் செயற்கைகோள்களை திட்டமிட்ட இலக்குகளில் நிலைநிறுத்தி வருகிறது. பூமி கண்காணிப்பு, வானிலை தகவல்கள், பேரிடர்களை முன்கூட்டி அறிந்து கொள்வது என இந்தியாவுக்குச் சொந்தமான செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது.

இந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக, இஸ்ரோவிலும் ஆராய்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன. கடந்த ஜனவரி 17ஆம் தேதி ஜிஎஸ்ஏடி -30-ஐ செயற்கைகோளை இஸ்ரோ விண்ணில் நிலை நிறுத்தியது. ஆனால் இது பிரெஞ்சு கயானாவில் உள்ள கூரு ஏவுதளத்திலிருந்து அரியேன் ராக்கெட்டை பயன்படுத்தி ஏவப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டை ஸ்ரீPஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோ நேற்று ஏவியது.

பிஎஸ்எல்வி சி -49 ராக்கெட் மூலம் இஓஎஸ் – 01 என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளை நேற்று பிற்பகல் 3.12 மணிக்கு விண்ணில் ஏவியது. இந்த செயற்கைகோள் புவி கண்காணிப்பு, விவசாயம், பேரிடர் மேலாண்மை, வன கண்காணிப்பு ஆகியவற்றை துல்லியமாக மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த பிஎஸ்எல்வி சி -49 ராக்கெட்டில், லிதுவேனியா நாட்டிற்கு சொந்தமான ஒரு செயற்கைகோளும், லக்சம்பெர்க்கிற்கு சொந்தமான 4 செயற்கைகோள்களும், அமெரிக்காவுக்கு சொந்தமான 4 செயற்கைகோள்களும் வணிக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டன.

முன்னதாக 3.02 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட நேரம் நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் பத்து நிமிடம் தாமதமாக ஏவப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக பத்து நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

தனித்தனியாக பிரிந்து திட்டமிட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது என்று இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், பிற துறைகளைப் போன்று வீட்டில் இருந்தபடி எங்களால் வேலை செய்ய முடியாது. இந்தத் திட்டத்திற்காக வைரஸ் தொற்று தாக்கத்தை கூட பொருட்படுத்தாமல் திட்டத்தில் தொடர்புடைய ஊழியர்கள் அனைவரும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து தங்களது பங்களிப்பை கொடுத்தார்கள். அவர்களின் கடுமையான உழைப்பின் காரணமாக இந்த ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. திட்டத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி என தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டில் இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் முதல் ராக்கெட்டான பிஎஸ்எல்வி சி -49, இந்தியாவின் 51 ஆவது பிஎஸ்எல்வி ரக ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles