விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பில் விமான நிலையம்!

0
71

டெல்லியிலிருந்து வாரணாசி புறப்பட்டஇண்டிகோ விமானத்திற்கு கொடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக அவசர வழியாக வெளியேற்றப்பட்டனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று காலை டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதற்காக இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்த நிலையில் பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டு இருந்தனர்.
விமானம் புறப்பட தயாக இருந்த நிலையில் இண்டிகோ நிறுவனத்திற்கு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வெளியானது.
பரபரப்படைந்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக , காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் விமானத்தை விமான நிலையத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
விமானத்தில் இருந்த பயணிகள் அவசர அவசரமாக அவசர வழியில் வெளியேற்றப்பட்டு விமானம் முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விமானத்தில் விடிகுண்டு வைக்கப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.