விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யுமாறு ரொஷான் ரணசிங்கவிடம் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் அதிபர் ரணில் தம்மை பதவி விலகச் சொன்னால் மாத்திரமே தாம் தயாராக இருப்பதாக ரொஷான் ரணசிங்க அவர்களிடம் தெரிவித்துள்ளார்.இதேவேளை, ரொஷான் ரணசிங்கவை பதவி நீக்கம் செய்யுமாறு அதே நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அவரை நீக்குவதற்கு தற்போது எந்த பிரச்சினையும் எழவில்லை என அதிபர் தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை இடைநிறுத்தி இடைக்கால குழுவொன்றை நியமித்ததன் பின்னர் அந்த வர்த்தமானியை நீக்குமாறு அதிபர் கூறியதாகவும், அந்த வர்த்தமானியை நீக்கப் போவதில்லை எனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.