28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

விவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைப்பு!

கொரோனாப் பெருந் தொற்று அச்சுறுத்தலினால் நாட்டில் எழுந்துள்ள அசாரதாரண சூழ்நிலையை அடுத்து எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் நடைபெறவிருந்த விவசாய ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழா ஒத்திவைக்கப்ப்பட்டுள்ளது. 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் 01 ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதனால் நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 
2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  ஜெய்க்கா செயற்றிட்டத்தின் கீழ் கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட  இந்தச் செயற்றிட்டத்தின் கீழ் 1.6 பில்லியன் ஜப்பானிய ஜென் ( இலங்கை ரூபாயில் 2.2 பில்லியன்) பெறுமதிக்கு கட்டடங்கள் மற்றும் ஆய்வு கூட உபகரணங்கள் மற்றும் நவீன விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன. 
கட்டுமானப் பணிகள்  கடந்த வருடம் நிறைவு பெற்ற பின்னரும், பாவனைக்கு விடாதமை குறித்துக் கவலையடைந்த ஜப்பானிய அரசாங்கம், அதனை விரைவில் திறந்து பாவனைக்கு விடுமாறு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அழுத்தம் கொடுத்ததையடுத்து, இந்தக் கட்டடத் தொகுதியை எதிர்வரும் 31 ஆம் திகதி திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெறவிருந்த இந்த நிகழ்வுக்குக் கொழும்பிலிருந்து கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தனிகர் அகிரா சுகியமா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர் கொழும்பிலிருந்து வருகைதரவிருந்த நிலையில், கொழும்பு மற்றும் அதனையண்டிய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதனால் நிகழ்வை ஒத்திவைப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles