வீடொன்றில் பெண்ணொருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் – மற்றுமொரு சந்தேக நபர் கைது

0
4

தம்பகல்ல காவல்துறை பிரிவிற்குட்பட்ட கொலோன் கந்தபிடிய பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 11 ஆம் திகதி பெண்ணொருவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

இந்த கொலைச் சம்பவத்திற்கு உதவி செய்த குற்றச்சாட்டில் மேலும் ஒரு சந்தேகநபரை காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர். 

ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுவரை இந்த சம்பவம் தொடர்பில் இரு பெண் சந்தேகநபர்கள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.