வெலிப்பனையில் கொள்ளை முயற்சி – மற்றொரு சந்தேகநபர் கைது!

0
90

விசேட அதிரடிப்படை அதிகாரிகள் என கூறி வெலிப்பனை பகுதியில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிற்கு சென்று அங்கிருந்தவர்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி சொத்துக்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனிதக் கொலை மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவினர் சந்தேகநபரை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவர் பஸ்கொட பகுதியை சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.