வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து புதிய அமைச்சுப் பதவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை பரந்துபட்ட வழிகளில் மேலும் வலுப்படுத்துவது குறித்து
கலந்துரையாடியதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.