வெள்ளப்பெருக்கில் சிக்கி 52 பேர் உயிரிழப்பு!

0
114

இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வடைந்துள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இதனிடையே கனமழை மற்றும் எரிமலை கரும்புகை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 2 கிராமங்கள் மூழ்கின. 100க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்;களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலர்காணாமல் போயுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.