வெள்ளவத்தையில் இந்தியப் பிரஜைக்கு கொரோனா தொற்று

0
292

கொழும்பு, வெள்ளவத்தையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வெள்ளவத்தை சந்தையை அண்டிய பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி ஒன்றில் கொரோனாத் தொற்றாளர் ஒருவர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வெளிநாடு செல்வதற்காக பி.சி.ஆர். பரிசோதனை செய்ய முற்பட்ட சமயமே தொற்று அடையாளம் காணப்பட்டது.

இதனை அடுத்து சுகாதார அதிகாரிகள் அவரை வைத்திய சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். அவரது வீட்டில் உள்ள இருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டவர் இந்தியப் பிரஜை என்று ஒரு தகவல் தெரிவித்தது.