28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் பிரதமர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆசீ வேண்டி வெள்ளவத்தை மயூரபதி பத்திரகாளியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற ஆசீர்வாத பூஜையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (2020.11.08) பிற்பகல் கலந்து கொண்டார்.

வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தலைமை பூசகரான உதய ராகம அவர்களினால் இந்த ஆசீர்வாத பூஜை நடத்தப்பட்டது. குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களும் கலந்து கொண்டார்.

இதன்போது கொவிட்-19 தொற்று நிலைமையிலிருந்து விடுபட்டு பாதுகாப்பாக வாழ்வதற்கு பிரதமரின் குடும்பத்தினர்களுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பிரார்த்திக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ‘கடவர’ ஆலயத்திலும் பிரதமர் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் ஆலய நிர்வாக சபையின் தலைவர் திரு.சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles