
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவைத் தொடர்ந்து வொய்ஸ் ஒவ் அமெரிக்கா வானொலி சேவையானது செயல்இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கும் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா வானொலி சேவையானது தனக்கு எதிரானது தீவிரவாத போக்குக் கொண்டது என குற்றம்சாட்டியுள்ள ட்ரம்ப் அதனைச் செயல் இழக்கச் செய்யும் உத்தரவில் கைச்சாத்திட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்த உத்தரவு வரிசெலுத்துவோர் இனி தீவிரபிரச்சாரங்களிற்கு அடிமையாகாமல் இருப்பதை உறுதி செய்யும் என தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை விமர்சித்து அரசியல்வாதிகள் வலதுசாரி ஊடகங்கள் தெரிவித்த கருத்துக்களை இணைத்துக்கொண்டுள்ளது.
வொய்ஸ் ஒவ் அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வானொலி சேவையாக உருவாக்கப்பட்டது.
வொய்ஸ் ஒவ் அமெரிக்கா வானொலி சேவையானது ஒருவாரத்திற்கு சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்களைச் சென்றடைவதாக அது தெரிவிக்கின்றது.
இதேவேளை வொய்ஸ் ஒவ் அமெரிக்கா வானொலியின் 1300 பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.