ஹொரணை தொழில்சாலையில் மேலும் 81 பேருக்கு கொரோனா

0
214

5 ஆயிரத்து 600இற்கும் அதிக ஊழியர்கள் பணியாற்றும் ஹொரணை குரகொடை ஆடைத் தொழில்சாலையில் மேலும் 81 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கு பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்தத் தொழில்சாலையில் பணியாற்றும் இன்னும் இரண்டாயிரம் பேருக்கான பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் நாளை வெளிவரவுள்ளன என ஹொரணை நிர்வாக பொதுச் சுகாதார பரிசோதகர் பி.சி.சேனாரட்ன தெரிவித்தார்.