அக்கரைப்பற்றில் பிரிமியர் லீக் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் ஆரம்ப நிகழ்வு

0
136

அம்மாறை அக்கரைப்பற்றில் பிரிமியர் லீக் 2023 கிரிக்கெட் சுற்றுத்தொடரின் ஆரம்ப நிகழ்வும் கழக சீருடை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தினால் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் கயிலாயபிள்ளை தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. தேசிய கொடியேற்றப்பட்டு ஆரம்பமான நிகழ்வில், இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமான கருத்துக்களும் முன்மொழியப்பட்டன. கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள வீரர்கள், நடுவர்கள், மேற்பார்வையாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் சீருடைகளும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
எதிர்வரும் 29ஆம் திகதி விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் முத்து விழாவினை சிறப்பிக்கும் முகமாக கிரிக்கெட் சுற்றுத்தொடர் நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.