அஜித் பட காமெடியை செய்த பிராட்.. அடுத்த நொடியே நிகழ்ந்த அதிசயம்.. நடுவரிடம் புகார் அளித்த லாபஸ்சேன்

0
132

ஆசஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்த நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.


இந்த போட்டியிலும் சர்ச்சைகளும் விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவஜா 47 ரன்கள் சேர்க்க, டேவிட் வார்னர் 24 ரன்களில் வெளியேறினார். அபாரமாக விளையாடிய ஸ்மித் 71 ரன்கள் சேர்க்க பேட் கம்மின்ஸ் 36 ரன்களும் டாட் மார்பி 34 ரன்களும் எடுத்தனர்.


இதனால் ஆஸ்திரேலியா அணி 295 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலையில் இந்த ஆட்டத்தில் மார்னஸ் லாபஸ்சேன் 82 பந்துகளை எதிர் கொண்டு வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டம் இழந்தார். மார்னஸ் இங்கிலாந்து வீரர்களை வெறுப்பேற்றும் வகையில் ரன் சேர்க்காமல் நின்று கொண்டிருந்தார். இந்த நிலையில் அட்டகாசம் படத்தில் ஆட்டோ கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஜீவா ஓடும் என்ற அஜித் கருணாஸ் காமெடி மிகவும் பிரபலம்.


அதேபோல் ஒரு காமெடியை தான் பிராட் செய்தார். மார்னஸ் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கிருந்து வந்த பிராட் ஸ்டெம்பில் இருந்த பைல்ஸை இடது புறத்திலிருந்து வலது புறமும் வலது புறத்திலிருந்து இடது புறமும் என மாற்றி வைத்தார். இந்த செயலை பார்த்து மார்னஸ் நக்கலாக சிரித்தார். ஆனால் அடுத்த பந்திலே அவர் கேட்ச் ஆகி வெளியேறினார்.இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத மார்னஸ் நடுவரிடம் சென்று ஸ்டுவர்ட் பிராட் தன்னுடைய கவனத்தை சிதறடித்து விட்டதாக குற்றம் சாட்டினார். பைல்ஸை இதுபோல் மாற்றி வைக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். ஆனால் பிராடு செய்ததில் எந்த தவறும் இல்லை என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஸ்டூவர்ட் பிராட்டின் இந்த செயலால்தான் விக்கெட் கிடைத்தது என்று இங்கிலாந்து வீரர்கள் அவரை கட்டி அணைத்துக் கொண்டாடினர்.