ஆயிரக்கணக்கான அடியவர்கள் வடம் பிடித்து இழுக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இன்று காலை 7 மணியளவில் நல்லூர் கந்தன் தேரில் எழுந்தருளினார் காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப் பெருமான் காலை 07 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். காலை 8.15 மணியளவில் தேர் இருப்பிடத்தையடைந்ததது. தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசித்தனர். பல நூற்றுக்கணக்காண அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி னர். நாளைய தினம் காலை தீர்த்தோற்சவம் நடைபெற்று, மாலை கொடியிறக்கம் இடம்பெறும்.