அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு விபத்து – 16 பேர் பலி

0
3

சிரியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 16 உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன .கடந்த 10 வருடங்களாக சிரியாவில் உள்நாட்டு பேர் நடைபெற்று வந்தது . இந்நிலையில், சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டு புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டார்.

உள்நாட்டு போரின்போது பயன்படுத்தப்பட்ட பல வெடிகுண்டுகள் வெடிக்காமல் பூமிக்குள் புதைந்து உள்ளன.கடந்த டிசம்பரில் பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தபின் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் வெடிக்காமல் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டன.

இந்நிலையில், சிரியாவின் லடாகியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால், அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் வசித்து வந்த பலர் வெடிவிபத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இச்சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.